கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் | PGDE | வினா விடை


வினா  

தற்கால சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு நிலையான சமநிலை ஆளுமையைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை பாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் ஊடாகப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

01. வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கூறல்' எனும் இரண்டு எண்ணக்கருக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துக.

விடை - 

வழிகாட்டல் - ஆலோசனை பெறுபவர் தனது நடத்தையை மாற்றமடையச் செய்வதற்கு தெவையான மிக உச்சமான விடயங்களை வழங்கும் வழிகாட்டல் செயலொழுங்கே வழிகாட்டலாகும்.

ஆலோசனை - ஒரு தனியாள் முகங்கொடுக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகளின் போது அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அவர்களுக்கு வழங்கும் வழிகாட்டல் மற்றும் பரிகாரம் மற்றும் ஆளுமையை வழிப்படுத்தும் சேவை.


02. வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் பிரதான நோக்கங்களில் ஒன்று ஆலோசனை நாடியைத் தொழில்சார் நிபுணர்களிடம் அனுப்பிவைக்கச் சிபார்சு செய்வதாகும். ஒரு பாடசாலை ஆலோசகர் மேற்கொள்ளக்கூடிய இவ்வாறான சந்தர்ப்பங்கள் நான்கு தருக.

விடை - 

  • பாடத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் தொடர்பாக பாடப் பொறுப்பு| ஆசிரியரிடம் அனுப்பி வைத்தல்.
  • உடல் தொடர்பான பிரசினைகளை இனங்கண்டு வைத்தியரிடம் அனுப்பி வைத்தல். 
  • மருந்துகளுடன் கூடிய ஆலோசனை அவசியமாகும் மாணவர்களை இனங்கண்டு உள மருத்துவரிடம் அனுப்பி வைத்தல்.
  • தொழில் ஆலோசனை அவசியமாகும் மாணவர்களை தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்.

03. ஆலோசனை தொடர்பில் முன்வைக்கக்கூடிய வரைவிலக்கணங்களை நோக்கும் போது 'ஆலோசனை' ஒரு பரந்த துறையாகக் காணப்படுகின்றது. அதனால் அது பல உப துறைகளைக் கொண்டுள்ளது. அவ்வாறான உப துறைகள் மூன்றினை விவரிக்குக.

விடை - 

  • கல்வி ஆலோசனை
  • உள ஆலோசனை.
  • குடும்ப ஆலோசனை
  • தொழில் ஆலோசனை

கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் | PGDE | வினா விடை கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் | PGDE | வினா விடை Reviewed by Admin on May 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.