கல்வித் தத்துவங்களும் கோட்பாடுகளும் | PGDE | வினா விடை - (02)

 


01. கல்வித்தத்துவத்தைக் கற்பதனால் ஆசிரியருக்குக் கிடைக்கும் நன்மைகள் இரண்டு எழுதுக?

  • கலைத்திட்ட உள்ளடக்கத்தை தீர்மானிக்க
  • கற்றல் கற்பித்தல் மறைகளை தீர்மானிக்க 
  • மாணவர்களது ஒழுக்க, மனப்பாங்கு விருத்தியை மேற்கொள்ள 
  • கல்வி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானிக்க

02. 'மாணவரின் இட்சகர்' என அழைக்கப்படுகின்ற ரூசோவின் கல்விததத்துவங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற பிள்ளை மையக் கருத்துக்கள் இரண்டைக் குறிப்பிடுக.

  • மாணவர் மையக்கல்வி அறிமுகம்.
  • செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல். 
  • மாணவர் சுதந்திரத்தினை ஊக்குவித்தல்.
  • கல்விக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்பினை அதிகரித்தல்.

03. முறைசார் பாடசாலைக் கட்டமைப்புக்கும் கல்விக்கும் எதிராக தற்காலத்தில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் இரண்டு எழுதுக.

  • பரீட்சை மையம் 
  • சுயமான கற்றலுக்கு தடையாகவிருத்தல். 
  • தொழில்சார் கல்விக்கு வாய்ப்பின்மை 
  • பழமையான கற்பித்தல் முறைகளை பின்பற்றல்.

04. இலங்கையில் செயற்படுகின்ற முறைசாராக் கல்வி நிறுவனங்கள் இரண்டைப் பெயரிடுக.

  • தேசிய இளைஞர் சேவை மன்றம். 
  • அரச சார்பற்ற நிறுவனம்.

05. கற்றல்-கற்பித்தல் செயன்முறையை விளைதிறனுடையதாக மேற்கொள்வதற்கு ஆசிரியர்த் தரவட்டங்கள் (Quslity Circle) மீக முக்கியமானவையாகும். அவற்றின் மூலம் ஆசிரியருக்குக் கிடைக்கும் இரண்டு நன்மைகளை எழுதுக.

  • தொழில்சார் பயிற்சியை மேம்படுத்தல் 
  • தொழில்சார் வாண்மைத்துவத்தினை விருத்தி செய்தல். 
  • தொழில்சார் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல்.


குறிப்பு 
  • விடைகளில் பிழைகள் அல்லது சேர்க்கவேண்டியவைகள் இருந்தால் தெரியப்படுத்தவும். sihatth3@gmail.com 
  • மேலதிக விடைகளைத் தேடி இதனுடன் சேர்த்துக்கொள்ளவும்
கல்வித் தத்துவங்களும் கோட்பாடுகளும் | PGDE | வினா விடை - (02) கல்வித் தத்துவங்களும் கோட்பாடுகளும்  | PGDE | வினா விடை - (02) Reviewed by Admin on May 28, 2022 Rating: 5

1 comment:

Powered by Blogger.