கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் | PGDE | வினா விடை - (02)

                                         


01. ஆலோசனைச் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விப் பின்புலம் ஏனைய ஆசிரியர்களின் கல்விப் பின்புலத்துக்குச் சமனானதல்ல. அவர்கள் தமது விசேடத்துவத்தினூடாகப் பிள்ளையினுள் சுய எண்ணக்கருவை அல்லது நுண்ணறிவை ஊட்டுபவர்களாகவும் அதனை விருத்தி செய்பவர்களாகவும் தொழிற்படுவர்.

i) ஆலோசக ஆசிரியரிடம் காணப்படும் விசேட பண்புகள் இரண்டு தருக.

  • உளப்பரிகாரம் தொடர்பான விசேடத்துவம்
  • மாணவர்களது பிரச்சினைகள் தொடர்பில் விஞ்ஞான பின்புலத்துடன் தலையீடு செய்யக்கூடிய நிபுணத்துவம்.

ii) வகுப்பறையில் நிரந்தரமாகப் பணிபுரியும் ஓர் ஆசிரியர் ஆலோசக ஆசிரியருக்கு உதவிபுரியக்கூடிய முறையியல்கள் நான்கினைச் சுருக்கமாக விளக்குக.

  • ஆலோசனை சேவை தொடர்பில் மாணவர்களுக்கு அறிவூட்டுதல், தன்னால் இனங்காணக்கூடிய பிரச்சினைகளை இனங்கண்டு ஆலோசனை சேவைக்கு அனுப்பிவைத்தல்.
  • மாணவர்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் ஆலோசனை பெறுவதற்குரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • ஆலோசனை சேவைக்கு செல்லும் மாணவர்கள் தொடர்பான தகவல்களை விமர்சித்தலை தவிர்த்தல் வேண்டும்.

iii) ஆசிரியர் என்ற வகையில் வழிகாட்டல் ஆலோகனையை வகுப்பறையில் பிரயோகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மூன்றினை விவரிக்குக.

  • பொருத்தமான கற்றல் சூழ்நிலைக்கு உதவி செய்தல். 
  • மாணவர்களின் கற்றல் பிரச்சினைகளை இனங்காணுதல்.
  • ஆலோசனைப் பண்புகளை வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பொருத்தப்பாடு உடையதாக்குதல்.
  • அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவுதல்

குறிப்பு
  • விடைகளில் பிழைகள் அல்லது சேர்க்கவேண்டியவைகளை தெரியப்படுத்தவும். sihatth3@gmail.com 
  • மேலதிக விடைகளைத் தேடி இதனுடன் சேர்த்துக்கொள்ளவும்

கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் | PGDE | வினா விடை - (02) கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் | PGDE | வினா விடை - (02) Reviewed by Admin on May 25, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.